Perambalur Collector orders officials to repair lake sluices before monsoon season!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழுமத்தூர் ஏரியினை பார்வையிட்டகலெக்டர் க.கற்பகம் , கிழுமத்தூர், ஓகளுர், கை.பெரம்பலூர் ஆகிய 3 ஏரிகளுக்காக நபார்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பீட்டில் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகளையும்,
ஆய்க்குடி ஏரியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் உட்புறம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மதகுகள் புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், பார்வையிட்ட அவர், பணிகளை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அப்போது, நீர்வளத்துறை, குன்னம் வட்டாட்சியர் அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.