Perambalur Collector Santha’s notice: Imprisonment for up to 7 years with fine for animal cruelty.

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 11 இன் படி, எந்தவொரு தகுதியற்ற விலங்கையும், பலவீனமான, புண்பட்ட அல்லது வயதான விலங்கு ஆகியவற்றை வேலைக்கு பயன்படுத்துதல், எந்தவொரு மிருகத்தையும் வலி அல்லது துன்பத்திற்கு உட்படுத்துதல்;, ஒரு விலங்கை ஒரு கூண்டில் வைத்திருப்பது அல்லது வேறு எந்தவிதத்திலும் அவை சுதந்திரமாக செல்ல அனுமதி இல்லாமல் வைத்திருப்பது, தொற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது விலங்கை தெருவில் செல்ல அனுமதித்தல், பட்டினி, தாகம் மற்றும் காயமுற்ற விலங்குகள், சிகிச்சை காரணமாக வலியால் பாதிக்கப்பட்ட விலங்குகளை விற்பனை செய்தல் போன்ற செயல்களுக்கு ரூ.25 -, ரூ.100- மற்றும் அதிகபட்சம் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டுவது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 51 A(g) – ன் கீழ் ஆதரவற்ற நாய்கள், சமுதாய நாய்கள் உட்பட எந்தவொரு விலங்கையும் காயப்படுத்துவது, கொல்வது அல்லது பாதிப்புகுள்ளாக்குவது தண்டனைக்குறிய குற்றமாகும். எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவிலங்கையும் கைவிடுவது குற்றமாகும். மூன்று மாதங்கள் வரை சிறைதண்டணை வழங்கப்படலாம்.

விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள் 2001 மற்றும் விலங்குகள் மீதான கொடுமையைத் தடுக்கும் சட்டம் 1960 இன் பிupவு 38 ன் கீழ் நாய்கள் குறைந்தது 4 மாத வயதை எட்டிய பின்னரே கருத்தடை செய்ய வேண்டும். சங்கிலி அல்லது கயிறு கொண்டு நீண்டநேரம் எந்த விலங்கையும் வைத்திருத்தல் அல்லது கட்டுப்படுத்துவது விலங்கின் மீதான கொடுமைக்கு ஒப்பானது.

ஒரு உரிமையாளர் தனது செல்லப் பிராணியை போதுமான உணவு, குடிநீர் அல்லது தங்குமிடம் வழங்கத் தவறினால், அவர் (அவள்) தண்டனைக்கு பொறுப்பாவார். போக்குவரத்தின்போது விலங்குகள் ஆரோக்கியமாகவும் நல்ல நிலையிலும் இருக்கவேண்டும். நோய் வாய்ப்பட்ட, சோர்வுற்ற அல்லது போக்குவரத்துக்கு தகுதியற்ற எந்த விலங்கையும் கொண்டு செல்லக்கூடாது. மேலும், கர்ப்பிணி மற்றும் மிக இளம் விலங்குகளை தனித்தனியாக கொண்டுசெல்ல வேண்டும்.

எந்தவொரு வன விலங்கையும் சில்மிசம் செய்வது, துன்புறுத்துவது, காயப்படுத்துவது அல்லது தொந்தரவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது போன்ற குற்றங்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 இன் பிhpவு 16 (சி) இன் படிஎந்த வன விலங்குகளையும் காயப்படுத்துவது, காட்டு பறவைகள் அல்லது ஊர்வனவற்றை அழிப்பது, அவற்றின் முட்டைகளை சேதப்படுத்துவது அல்லது அவற்றின் முட்டை அல்லது கூடுகளுக்கு இடையூறு விளைவிப்பது சட்டவிரோதமானது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25,000- அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!