Perambalur Collector Venkatapriya orders demolition of 51 dilapidated school buildings
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 பள்ளி கட்டிடங்களும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 23 பள்ளி கட்டிடங்களும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12 பள்ளி கட்டிடங்களும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 9 பள்ளி கட்டிடங்கள் என மொத்தம் 51 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார். இடிக்கும்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவும், அனைத்து துறை அலுவலர்களுக்கும் முன்னதாக தகவல் கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், அருகில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு அல்லது குடியிருப்புகளுக்கு எவ்வித சேதமும் இல்லாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென அதில் அவர் தெரிவித்துள்ளார்.