Perambalur: Collector visited TNPSC competitive examination free coaching classes.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கலெக்டர் குரூப் 1, குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளிடம் அங்கு வழங்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து பார்வையிட்டு, தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வு மாணவ,மாணவிகளிடம் வினாக்கள் எழுப்பி விளக்கங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தைச்சார்ந்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சிவகுப்புகள் 19.01.2024 முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1 .00மணி வரை நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை மற்றும் புரஜக்டர் வசதியுடன் கூடிய வகுப்பறைகள், போட்டித்தேர்வுகளுக்கு தேவையான அனைத்து சமச்சீர், பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரி தேர்வுகள் பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் 09.06.2024 அன்று நடைபெறவுள்ளன. இப்போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்மாநில அளவிலான 05 கட்டணமில்லா முழு பாட மாதிரி தேர்வுகள் 21.05.2024,24.05.2024, 27.05.2024, 30.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளன.
இந்த மாதிரித்தேர்வுகளில் நேரடியாக கலந்து கொள்ளமாணவ, மாணவிகள் தங்களின் புகைப்படம் மற்றும் குரூப் – 4 விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.
மேலும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி வகுப்புகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாங்கள் படிக்கும் காலத்தில் இதுபோன்ற வசதிவாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் இன்று ஏராளமான கல்வி வாய்ப்புகளையும், உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும், உயர்கல்வியை முடித்தவர்கள் பணிக்கு செல்வதற்கு தேவையான தொழில்நெறி வழிகாட்டி பயிற்சி வகுப்புகளையும் தமிழக அரசு நடத்திவருகின்றது.
அனைத்து மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் தேர்வு எழுதி அரசு அலுவலர்களாக ஆக வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் தாசில்தார் சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.