Perambalur Collector visits the counting center for the Assembly General Election 2021
சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர் வெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2021 முன்னிட்டு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குபதிவு இயந்திரங்களை வாங்குவதற்காக ஏற்படுத்தப்படவுள்ள வரவேற்பரை, பாதுகாப்பாக வைப்பதற்கான அறைகள், வாக்கு எண்ணிக்கை மையம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை தனித்தனியாக வைப்பதற்கும், அதனை அனைத்து இடங்களிலும் கண்காணிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சிசிடிவி பொருத்தப்பட வேண்டிய இடங்கள், ஊடகமையம் அமைக்கப்படவுள்ள இடம், வேட்பாளர்களின முகவர்களை தங்க வைப்பதற்கான இடங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் வெங்கடபிரியா அப்போது தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பெரம்பலூர் வருவாய் கோட்ட சப்-கலெக்டர் ஜே.இ.பத்மஜா, பெரம்பலூர் வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.