சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கர் விருது மற்றும் துரோணாச்சாரியார் விருது ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் தகவல்
மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு (Sports Administrators) பல்வேலு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் ;வழங்கி வருகிறது.
அதன்படி 2015-2016 ஆம் ஆண்;டிற்கான ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கர் விருது மற்றும் துரோணாச்சாரியர் விருது ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ராஷ்டிரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருது மற்றும் துரோணாச்சார்யா விருது (Rashtriya Khel Protsahan Puruskar Award and Dronacharya Award) விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதிற்கான விண்ணப்பங்கள் என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினர் – செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈவேரா, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா சென்னை – 600 084 என்ற முகவரிக்கு வருகின்ற 10.04.2016க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்கள் பெற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம், அலைபேசி எண். 94433 76054 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். எனவே தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.