தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் Perambalur Elections என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் துவக்கம் ஆட்சியர் தகவல்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வுகள் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் அறியும் வண்ணம் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம்படுத்தப்படுகின்றன. மேலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்வுகள் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் ஏற்பாடாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
Perambalur Elections என்ற முகவரியுடன் துவக்கப்பட்ட இந்த பக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் பதிவேற்றப்படுவதுடன், இந்த முகநூல் பக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான செய்திகள் உள்ளிட்ட பல சேவைகளை இந்த முகநூல் பக்கத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த முடியும், என அவர் தெரிவித்துள்ளார்.