பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே காதல் தோல்வியால் மனமுடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், சின்னபட்டாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரமேஷ் (21). இவர் பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசு மாணவர்
விடுதியில் தங்கி, குரும்பலூர் பாரதிதாசன் உறுப்புக் கல்லூரில் பி.பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8ந்தேதி மாலை 6மணி முதல் ரமேஷ் திடீரென காணாமல் போனார். இதனையடுத்து ரமேஷை விடுதி காப்பாளர் மற்றும் சக மாணவர்கள்
உதவியுடன் தேடி பார்த்து கிடைத்திடாததால் போலீசுக்கும், ரமேஷின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், செஞ்சேரி கிராமத்தில் பெரியசாமி என்ற விவசாயி கிணற்றில் வாலிபர் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது ரமேஷின் சடலம் என்பது தெரிய வந்தது. மேலும் ரமேஷ் தான் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையுமட கிணற்றின் அருகே கைப்பற்றனர். அக்கடிதத்தில் இதுநாள் வரை என்னை கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா, அம்மா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி என்றும், மன வேதனையில் இருக்கும் தன்னால் இதற்கு மேல் இவ்வுலகில் வாழ முடியவில்லை என்றும், தன்னை பற்றி எவரும் கவலை கொள்ள வேண்டாம், எனது இறப்பிற்கு மாசிலாமணி என்பவரின் மகள் அனுஷ்யா தான் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த கடித்தின் பேரில் பெரம்பலூர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.