பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய காற்று ஆற்றல் மூலம் இயங்கும் ரோபோ புனேவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி தொழில்நுட்ப கல்வி நிலையம் கல்லூரி மாணவர்களுக்காக ரோபோக்கான் போட்டியை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.
இந்தாண்டு நடைபெறும் ரோபோக்கான் 2016 போட்டியில், இந்தியாவில் அளவில் 98 கல்லூரிகளில், தமிழகத்தில் 4 கல்லூரிகளும் தேர்வாகி உள்ளன. இதில், பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மார்ச். 3, 4, 5 ஆகிய தேதிகளில் பூனேவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சீனிவாசன் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரதீப்குமார் வழிகாட்டுதலின் படி, மாணவர்கள் சூரிய நாராயணன், கௌதம், தில்லை சிவகாமி, சேதுபதி, சக்தி, பிரகாஷ், பென்னிகோ, பாலகிருஷ்னண், ஸ்டாலின், மதுகோமல்மன்னா, மாணவிகள் லாவன்யா, பிரியதர்ஷினி, பிரியம்பெச் ஆகியோர் ரோபோக்கள் உருவாக்கி உள்ளனர். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தாங்கள் உருவாக்கிய காற்றாற்றல் மூலம் உருவாக்கிய ரோபோவின் செயல்பாடுகள் கல்வி நிறுவனங்களின் தலைவரும், நிறுவனருமான அ. சீனிவாசன் முன்னிலையில் செயல் விளக்கம் காண்பித்தனர்.
அதைத்தொடர்ந்து, போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கிய கல்லூரி தாளாளர் தெரிவித்ததாவது:
அனைத்து அறிவியல் கண்டுபிடிப்பும் மனித குலத்திற்கு வரும் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்க வேண்டும். ரோபோக்கள் தொழிற்சாலைகளில் செய்து வரும் கடினமான வேலைகளை எளிதில் செய்வதற்கும், இதனால் உற்பத்தியாகும் பொருட்களின் விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதில், கல்லூரி முதல்வர் இளங்கோவன் உள்ளிட்ட பேராசிரியர்கள் உடனிருந்தனர்.