Perambalur communists who participated in picketing freed: court order!
2019 இல் மறியல் போராட்டம் செய்த மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரம்பலூர் நிர்வாகிகள் 6 பேர் மீது அரசு வழக்குப் பதிவு செய்த அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
2019ம் ஆண்டு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்து காஷ்மீரில் உள்ள கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்திய அரசு வைத்தது. இதனை வன்மையாக கண்டித்துடன் காஷ்மீர் சென்று பார்வையிட சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியை காஷ்மீருக்குள் நுழையவிடாமல் காவல்துறை தடுத்து கைது செய்தது.
இதனை கண்டித்து பெரம்பலூரில் 9-8-2019 அன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பெரம்பலூர் காவல்துறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ஏ.கே.ராஜேந்திரன், அ.கலையரசி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.கிருஷ்ணசாமி, வசந்தா, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1ல் நீதிபதி சுப்புலட்சுமி முன்னிலையில் விசாரானை நடைபெற்று வந்தது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர் ப.காமராசு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் போதிய சாட்சிகள், ஆதாரங்கள் இல்லாததாலும், குற்றம் நிரூபிக்கப்படாததாலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இன்று விடுதலை செய்து நீதிபதி சுப்புலட்சுமி தீர்ப்பளித்தார்.
இது குறித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தெரிவித்ததாவது:
நாடு இன்றைய தினம் 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட குழு வரவேற்க்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோழர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி திறம்பட வாதாடி விடுதலை பெற்றுத் தந்த வழக்கறிஞர் ப.காமராசுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், என தெரிவித்தார்.