Perambalur: Construction of barrage on Maruthaiyar at Velamuthur at a cost of Rs.3.09 crore; Minister Sivashankar inaugurated!
பொதுப்பணித்துறை நீர்வளத்துறை சார்பில், பெரம்பலூர் ஒன்றியம் விளாமுத்தூர் கிராமத்தில் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் 33 அணைக்கட்டுகள் மற்றும் 2 நீர்த்தேக்கங்கள் உள்ளன. மருதையாறு கொள்ளிட ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். மேலும் இது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான்ட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள பச்சை மலையிலிருந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் பாய்ந்து, கொள்ளிடத்தில் இணைகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துத்தூர் மற்றும் வைப்பூர் கிராமங்களுக்கு அருகில் 70.40 கி.மீ தூரம் பாய்ந்தோடி கொள்ளிடத்தில் கலக்கிறது.
நீர்வளத்துறை அமைச்சர் 29.03.2023 அன்று சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை கோரிக்கையின் போது, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் வட்டம் விளாமுத்தூர் கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.3கோடியே 90 ஆயிரம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை அறிவித்தார். அந்த அறிவிப்பினை தொடர்ந்து, 11.09.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த தடுப்பணை அமைக்கப்படுவதன் மூலம் மருதையாற்றின் நீரானது வீணாவதை தடுப்பதுடன், தடுப்பணை சுற்றியுள்ள பகுதியில் 125 கிணறுகள் நீர் மட்டம் உயர்ந்து, மறைமுக ஆயக்கட்டு 665.50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுன் குடிநீர ஆதாரமும் அதிகரிக்கும். நீர்வளத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.