Perambalur; Construction of new building for Periyavenmani Govt ITI; Minister Sivashankar inaugurated!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.8.10 கோடி மதிப்பீட்டில் கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.7, கோடியே 79 லட்சத்து ,82 ஆயிரத்து 500 மதிப்பில் பெரியவெண்மணியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் ஓலைப்பாடி ஊராட்சி கல்லை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.13.16 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய நியாய விலைக்கடை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, ஓலைப்பாடி கிராமம், கிராம நிர்வாக அலுவலகம் அருகில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை, வேப்பூர் பேருந்து நிலையம் அருகில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையையும் திறந்து வைத்தார்

இதில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம். சி. ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பெரியவெண்மணி ஐடிஐ கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி முடிந்த பின்னர், பின்புறம் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட வயலை பார்வையிட்ட அமைச்சர், கலெக்டர் விவசாயிகளிடம், அது குறித்து கேட்டறிந்தனர். அப்போது, உழவர்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!