Perambalur: Consultation meeting with political parties regarding the change of polling stations!
பெரம்பலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 147. பெரம்பலூர் (தனி) மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றிற்கான மாற்றியமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களின் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது.
அப்போது அவர்தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகள் மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்கவும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 9 வாக்குச்சாவடிகளின் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் பெயர் மாற்றம் செய்திடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் கூற்றுகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைப்பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பார்வைக்கு காட்டப்பட்டுள்ளது. மேற்படி விலைப்பட்டியலின் மாற்றம் ஏதும் இருப்பின் 16.03.2024 காலை 11.00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும், எனவும் தெரிவித்தார்.
அரசு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.