Perambalur court ordered revenue department to give compensation of Rs.50 thousand to the farmer who did not change the patta!


பெரம்பலூரில் பட்டா பெயர் மாற்றம் செய்வதில் தாமதத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான விவசாயிக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்க வருவாய் துறையினருக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமர் (வயது 55) விவசாயி.இவர் பாடாலூரில் தனக்கு சொந்தமான பூர்விக நிலத்தின் ஒரு பகுதியை தங்கவேல் என்ற நபருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான சிவில் வழக்கில் ராமருக்கு சாதகமாக தீர்ப்பானதால், அந்தத் தீர்ப்பைக் கொண்டு தனது பெயருக்கு மீண்டும் பட்டா மாற்றம் செய்து தனது பெயருக்கு தனிப்பட்டா வழங்க கோரி ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அதற்கு உரிய கட்டணத்தையும் செலுத்தி, சிவில் வழக்கின் தீர்ப்பு நகலையும்இணைத்திருந்தார். ஆனால் ராமர் பெயருக்கு மாற்றம் செய்து தராமல்
வருவாய் துறையினர்அவரை அலையவிட்டனர்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராமர் தனது வழக்கறிஞர் அய்யம்பெருமாள் மூலம்
பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆலத்தூர் மண்டல துணை தாசில்தார், அப்போதைய தாசில்தார் முத்துகுமரன் உள்பட ஆர்.டி.ஓ. மாவட்ட வருவாய்அலுவலர் மற்றும் கலெக்டர் மீது வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், ராமர் மனுவை பகுதியாக அனுமதித்து விசாரணை நடத்தினர். ராமர் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினரின் சேவை குறைபாட்டிற்காக மற்றும் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள எதிர்மனுதாரர்கள் 2 பேரும்
விவசாயி ராமருக்கு
நிவாரணத்தொகையாக ரூ.50ஆயிரமும், வழக்குசெலவுத்தொகையாக ரூ.10ஆயிரமும் தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள்வழங்கவேண்டும் என்று உத்திரவிட்டனர்.இல்லாவிட்டால் சதவீத ஆண்டுவட்டி கணக்கிட்டு வழங்க வேண்டும்.மேலும் 4 வாரத்திற்குள்
தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகத்தில் ராமர் பெயரை பதிவு செய்து பெயர் மாற்ற பட்டா வழங்கவேண்டும் என்று உத்திரவிட்டனர்.இந்த வழக்கிலிருந்து ஆர்டிஓ மாவட்ட வருவாய் அலுவலர் கலெக்டர் ஆகியோரை விடுவித்தும் தீர்ப்பளித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!