பெரம்பலூரில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட தொழில் மையத்தை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார். சட்ட மன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார், பெரம்பலூர் நகராட்சித் துணைத்தலைவரும் பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் மற்றும். வங்கி அதிகாரிகள், அரசு அலுவலர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் சிவா உள்பட பலர் உடனிருந்தனர்.