Perambalur: Discrimination in provision of basic amenities; Constituency women’s request to intervene in Thol. Thirumavalavan MP!
பெரம்பலூர் மாவட்டம், சிதம்பரம் எம்.பி தொகுதிக்கு உட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சியில் வேப்பூர், கல்லை, காரப்பாடி கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட நான்கு கிராமங்களுக்கும் ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், சாக்கடை வசதி, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டியும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்து வந்த நிலையில்,
இன்று வேப்பூர் கிராமத்தில், உள்ள அரசு மகளிர் கல்லூரியில் கட்டப்பட்ட விடுதி திறப்பு விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான சிவசங்கர் வருவதை அறிந்த வேப்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு பகுதியை பெண்கள் அக்கிராமத்தின் 6வது வார்டு மெம்பர் பழனிமுத்து என்பவர் தலைமையில், அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என வேதனை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபம் அடைந்த அமைச்சர் சிவசங்கர், நீன்னு ஒரு மக்கள் பிரதிநிதி அரசியல்வாதி போல் ஏன் கை நீட்டி பேசுகிறாய் என வார்டு உறுப்பினரை பொதுவெளியில் ஒருமையில் பேசினார். இதனால் மேலும் வேதனை அடைந்த வார்டு உறுப்பினர் பழனிமுத்து, எனக்காக கேட்கவில்லை எனக்கு வாக்களித்த மக்களுக்காக தான் கேட்கிறேன். தயவுசெய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தாருங்கள் என கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருக்கிறாயா? என அமைச்சர் வார்டு உறுப்பினரை பார்த்து கேள்வி எழுப்பியதோடு செய்யச் சொல்கிறேன் போ என அலட்சியமாக பதில் அளித்தார்.
அடிப்படை வசதி கேட்டு அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் அலட்சியமாக பதில் அளித்த தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான சிவசங்கரின் செயல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், முன்னதாக ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில், உரிய நாட்கள் பணி வழங்கவில்லை, பணி வழங்கிய நாட்களுக்கு பல மாதங்கள் ஆகியும் உரிய கூலி கொடுக்கப்படவில்லை என்றும், ஊராட்சி அலுவலத்திற்கு சென்றால், ஊராட்சி தலைவரின் கணவர் நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்களா என்றும் கேட்கிறார் என்றும் கேட்கிறார் என தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அந்த பெண்கள் தெரிவித்தாவது:
வாக்களிக்கவில்லை என ஊராட்சித் தலைவரின் கணவர், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த எங்கள் பகுதிக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை, சுடுகாடு உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்கு, பாதை வசதிகள் சரியாக இல்லை, மேலும், தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருகிறோம், ஊராட்சி தலைவரின் கணவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் பதிலில் எங்களுக்கு திருப்தி இல்லை, கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் எங்களிடம் ஓட்டு வாங்கி சென்ற விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான தொல்.திருமாவளவன் நேரிடையாக எங்கள் பகுதியை பார்வையிட்டு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் ஆதங்கத்தை தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.