Perambalur district 96.91 percent pass in Class 11 general examination: Collector V. Shantha
பதினோறாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் அனைத்துப் பள்ளிகளுக்கு இடையேயான தேர்ச்சி விகிதத்தில் 96.91 விழுக்காடு தேர்ச்சி பெற்று கடந்த 2019ஆம் ஆண்டை விட 0.28 விழுக்காடு அதிகமாக பெற்று 17ம் இடத்தை பெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வில் 3880 மாணவர்களும், 4007 மாணவிகளும் என மொத்தம் 7887 பேர் தேர்வெழுதினர். இதில் 3731 மாணவர்களும், 3912 மாணவிகளும் என மொத்தம் 7643 பேர் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 96.91 விழுக்காடு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 96.63 தேர்ச்சி விழுக்காடு பெற்றது.