Perambalur district AIADMK activists meeting to celebrate Jayalalithaa’s 72 birthday
பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாவது குறித்த அதிமுக மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் இரா. துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்), சுரேஷ் (செந்துறை), நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, பேரூர் செயலாளர்கள் செல்வராஜ் (குரும்பலூர்),வினோத் (பூலாம்பாடி), (ரெங்கராஜ் அரும்பாவூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், முன்னாள் துணைசபாநாயகர் அருணாசலம், முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி உட்பட பலர் பேசினர். மாவட்டசெயலாளரும்,எம்எல்வுமான ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அனைத்து கிளைகளில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பூங்கா அமைக்க அனுமதி அளித்து 10 கோடியும், சின்ன வெங்காயம் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைக்க ரூ.2 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு நன்றி தெரிவிப்பது, விவசாயத்தை பேணிக்காக்கும் வகையில் வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்த முதல்வருக்கும் நன்றி
தெரிவிப்பது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், ஓட்டுப்போட்ட வாக்காளர்களும் நன்றி தெரிவிப்பது, நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றிபெற பாடுபடுவது என்பன போன்ற
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் பூவைசெழியன், பிச்சைமுத்து, மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், செல்வக்குமார், வீரபாண்டியன், ராஜேஸ்வரி, முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ், வைஸ்மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ராணி வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் லெட்சுமி நன்றி கூறினார்.