Perambalur district AIADMK decision to celebrate Jayalalithaa's birthday
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெ.பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து சிறப்புரையாற்றினர்.
இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டுதல், ஜெ. சிலைக்கு மாலை அணிவித்தல், கொடியேற்றி இனிப்பு வழங்குதல், பட்டிமன்றம், ஏழை,எளியோருக்கு வேட்டி சேலை வழங்குதல், அன்னதானம் வழங்குதல் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராணி, லெட்சுமி, மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பெருமாள், கவுள்பாளையம் செல்வக்குமார், வீரபாண்டியன், குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ், குரும்பாபாளையம் நாகராஜ், எசனை பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.