Perambalur District: BDO Sekar information to take steps to properly distribute drinking water in T.Kalathur!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.களத்தூர் கிராமத்தில் குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வழங்கும் மோட்டாரினை இயக்கிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் முறையாக தமது பணியை செய்யாததால் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு சென்றடையவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை இருந்ததாகவும்,

தற்போது , தற்காலிக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவரை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என கிராம ஊராட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுளதை தொடர்ந்து அந்த பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் தடங்கல்கள் ஏதும் ஏற்படின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளிக்கப்படுகிறது.

தனிநபர் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் தங்குதடையின்றி செல்லுவதற்கு ஏற்ற வகையில் ஆங்காங்கே கேட்வால் அமைத்திடவும், அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் முறையாக சுத்தம் செய்யப்படவும் கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு நெறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் டி.களத்துர் கிராமத்தில் சுத்தம் செய்யப்படாமலிருந்த சில வடிகால் வாய்க்கால்களை இரண்டு நாட்களுக்குள் சுத்தம் செய்திட கிராம ஊராட்சி தலைவருக்கும் மற்ற பணியாளர்களுக்கும் உரிய உத்தரவு பிறப்பிப்பித்து அதனை கண்காணித்திட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பொறுப்பு நிர்ணயக்கப்பட்டுள்ளது.
என பிடிஓ சேகர் தெரிவித்துள்ளார்.


கடந்த 7ம் தேதி அப்பகுதி மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!