Perambalur District “Chief Minister with People” Program: Camp Days in Municipalities, Town Panchayats; Collector Information!
பெரம்பலூர் நகராட்சி மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகராட்சியில் உள்ள வார்டுஎண்கள் 1, 2, 3, 4, 12 மற்றும் 13இல் குடியிருக்கும் பொதுமக்கள் 11.12.2023 அன்று வடக்குமாதவி ரோட்டில் அமைந்துள்ள என்.எஸ்.கே மஹாலிலும், வார்டு எண்கள். 7, 8, 9, 10, 11 மற்றும் 21இல் குடியிருக்கும் பொதுமக்கள் 12.12.2023 அன்று துறைமங்கலம் ஜே.கே மஹாலிலும், வார்டு எண்கள். 5, 6, 18, 19, மற்றும் 20இல் குடியிருக்கும் பொதுமக்கள் 13.12.2023 அன்று சங்குப்பேட்டை அருகில் உள்ள முத்துக்கோனார் திருமண மண்டபத்திலும் மற்றும் வார்டு எண்கள். 14, 15, 16, மற்றும் 17இல் குடியிருக்கும் பொதுமக்கள் 14.12.2023 அன்று துறையூர் ரோடு, அருகில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்திலும் நடைபெறுகிறது.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான, பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 15.12.2023 அன்று பூலாம்பாடி, சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 16.12.2023 அன்று அரும்பாவூர், கடைவீதியில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 19.12.2023 அன்று லெப்பைக்குடிக்காடு, மெயின்ரோடு, கிழக்கு பள்ளிவாசல் மஹாலிலும், மற்றும் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 21.12.2023 அன்று குரும்பலூர், மெயின்ரோடு, ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
எனவே, பெரம்பலூர் நகராட்சியில் உள்ள பொதுமக்கள் வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேதியிலும், மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் முகாம் நடைபெறும் தேதியன்று தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.