பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சுமார் நான்கறை ஆண்டுகளுக்கு மேல் பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த டாக்டர். தரேஸ் அஹமது இன்று அரசால் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே. நந்தகுமார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற உள்ளார்.
தற்போது பெரம்பலூரில் பணியாற்றிய டாக்டர் தரேஸ் அஹமது சிறப்பானதொரு சேவையை திறம் பட வழங்கி உள்ளார். கல்வியில் அதிகளவு அக்கறை கொண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் எட்டி உள்ளார்.
2004 ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம் ஆனந் சின்கா போது துவங்கிய சிறார் திருமண சட்டத்தை தடுப்பு தீவிரமாக செயல்படுத்தி பெண் கல்வியை அதிகரிக்க கவனம் செலுத்தி பணியாற்றி விருதும் பெற்றுள்ளார்.
கல்விக் கடனை வங்கியாளர்கள் மாணவர்களுக்கு அதிக அளவில் மறுத்த போதும் ஏராளமான மாணவர்கள் அவர்களின் கல்வியை தொடர கல்விக் கடன் பெற்று உயர்கல்வி பயில வழி வகை செய்துள்ளார்.
மருத்துவ துறையில் நல்ல கவனமும் செலுத்தி உள்ளார்.
தொழில் துறையில் பண்ணைகள் அமைத்ததல், விவசாய திட்டங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றையும் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.
மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான கல்லாறு (விசுவகுடி) நீர்த்தேக்கம் கிடப்பில் இருந்து வந்த போது அதற்கான மதீப்பிட்டு தொகையை அதிகரித்து அணையை செயல் வடிவத்தில் கொண்டு வந்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்காமல் முடிந்த வரை ஏழை எளிய மக்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பை வழங்கி உள்ளார். அதிமுகவினர் கடும் கோபத்தில் இருந்தாலும், ஆட்சியரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
குரூப்.1, குரூப் 2 தேர்வுகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்ககேற்க இலவச பயிற்சிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மூட நம்பிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மதம், மொழி, இனம் பார்க்காத முற்போக்கு சிந்தனை உள்ள நல்ல மக்கள் சேவகன் டாக்டர். தரேஸ் அஹமது இன்று பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளையும், மக்களையும் சந்திப்பதை வேண்டா வெறுப்பாக செய்வார்கள். போதையில் இருப்பார்கள், பரிசு கிடைக்குமா என ஏங்கிய ஆட்சியாளர்களும் உண்டு, இந்த மாவட்டத்தில் ஆட்சியர் இருக்கிறா என்பதே கேட்டு தெரிந்து கொள்ள இவரை போல் மக்கள் சிந்தனை உள்ள நல்ல கலெக்டர் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூருக்கு கிடைப்பாரா என்பது அரிது என்றாலும், பொறுத்திருந்து பார்ப்போம்….