Perambalur District Collector office lift not service to diable people

lift-perambalur-collectorate பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் உள்ள லிப்ட் செயல்படாதததால் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் அலட்சிய போக்கை கடைபிடிப்பதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், இரண்டு அடுக்கு மாடி கட்டடங்களின் படிகளில் ஏறி இறங்குவதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

முக்கிய வாயிலின் முன்பகுதியில் உள்ள இரு லிப்டுகள் இருந்தும் ஒன்று கூட இயங்குவதில்லை. சிரமமப்பட்டு இரண்டு மாடிகளுக்கு சென்று அலுவலர்களை பார்க்க சென்றால் அவர்கள் அங்கும் இருப்பதில்லை, மீண்டும் மறுமுறை ஏறி இறங்குவது மாற்று திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் பெரும் கஷ்டமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே, அதே வழியாக நாள்தோறும், வந்து செல்லும் ஆட்சியர் நந்தக்குமார், அதனை சீரமைத்து மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களின் சிரமத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் வணிக வளாகங்கள், மறறும் கட்டடங்களில் இயக்கப்படும் லிப்ட் எந்நேரமும் தயராக இருக்குமாறு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. அரசோ எவ்வளவு அலட்சிய போக்கை கடைக்கிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!