Perambalur District Collector V. Santha congratulates the students who won the Hand ball Tournament
37-வது மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மதுரை மாவட்டம் விரகனூரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் கடந்த 5 முதல் 7 வரை நடைபெற்றது.
இதில் 34 அணிகள் கலந்து கொண்டன.
பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நமது மகளிர் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த கைப்பந்து (ஹேண்ட்பால்) மாணவிகள் மிகச் சிறப்பாக விளையாடி முதலாம் இடம் பெற்று தங்கப்பதக்கமும், கோப்பையினையும் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற கைப்பந்து வீராங்கனைகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் விளையாட்டு விடுதி மேலாளார் .ஆர்.ஜெயகுமாரி மற்றும் கைப்பந்து பயிற்றுநர் ஆர்.வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்,