பெரம்பலூர் மாவட்ட , வட்டார, நகர காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட தலைவர் வக்கீல் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மாநில தலைவர் இளங்கோவன் பெரம்பலூர் மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதன்படி பெரம்பலூர் மாவட்ட துணை தலைவர்களாக தேனூர் கிருஷ்ணன், நல்லுசாமி, ராஜசேகரன், செங்கமலை, ஆசிரியர் கோவிந்தசாமி, சின்னசாமி, ராமசாமி, ராஜேந்திரன், ராஜசேகர், சுந்தர்ராஜ், திருநாவுக்கரசு, துரைராஜ், மாவட்டபொதுசெயலாளர்களாக அத்தியூர் சேகர், சாமிதுரை, ஆசைத்தம்பி, பாண்டியராஜ், அருண்பிரகாஷ், மாரிமுத்து, மாவட்டபொருளாளராக தங்கவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்டார தலைவர்களாக செல்வகுமார்(பெரம்பலூர் வடக்கு), ரெங்கராஜ்(தெற்கு), இளையபெருமாள் (வேப்பந்தட்டை கிழக்கு), வெங்கலம் சின்ராஜ் (மேற்கு), காமராஜ்(ஆலத்தூர் கிழக்கு), அருணாச்சலம்(மேற்கு), கண்ணன் (வேப்பூர் வடக்கு), வக்கீல்செல்வம் (தெற்கு), பெரம்பலூர் நகர தலைவராக சையது சுல்தான், பேரூர் தலைவர்களாக திருநாவுக்கரசு (குரும்பலூர்), ஜெயராமன்(அரும்பாவூர்), ஜமால்முகமது (பூலாம்பாடி) ஜீனாபாபு (லெப்பைக்குடிகாடு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.