Perambalur District Consumer Day Pledge; It was presided over by the Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நுகர்வோர் தின உறுதிமொழி நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் இன்று (15.03.2024) நடைபெற்றது.
இதில், “நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதோடு நுகர்வோருக்குரிய உரிமைகளை நிலை நிறுத்த பாடுபடுவோம். நாம் தரமான பாதுகாப்பான பொருட்களையே வாங்குவோம். நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பில்களை பெறுவோம். தேவைக்கேற்ற நுகர்வினை மேற்கொள்வோம். நாம் அனைவரும் பொறுப்புள்ள மற்றும் கடமையுள்ள நுகர்வோராக இருக்க ஒன்றுபடுவோம்.
நுகர்வோர் பாதுகாப்புடன் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-யினை பின்பற்றி நுகர்வோராகிய நாம் நமக்கான பாதுகாப்பினை உறுதி செய்வோம். அடிப்படை உரிமைகளைப் பற்றி அறிவோம். நுகர்வோர் கல்வியை பரப்புவோம். எல்லா நிலையிலும் விழிப்புடன் செயல்படுவோம். விழிப்புணர்வு மிக்க நுகர்வோரே அதிகாரமிக்க நுகர்வோர் என்பதை அறிவோம்.” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி நிகழ்வில், டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.