Perambalur District Development Coordination & Monitoring Committee Meeting; Perambalur MP It took place under the leadership of Parivendar.

பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் வே.சாந்தா முன்னிலையில், பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தர் கானொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்தும், திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவும், சரியாகவும் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை கண்காணித்திடவும், மாவட்ட மற்றும் பொதுமக்களின் வளர்ச்சிக்காக இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் கலெக்டர், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் நடத்தபட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்துகின்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தின்கீழ் 2020-2021-ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு ரூ.256 ஊதியத்தில் பணிகள் வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படுகிறது.

2019-20 ஆம் நிதியாண்டில் 260 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 86,001 குடும்பங்களுக்கு 10,65,769 நாடகள் பணி வழங்கப்பட்டுள்ளது. 2019-20 நிதி ஆண்டில் 4,792 பணிகள் ரூ.35.48 கோடி மதிப்பீட்டிலும் 2020-21 ஆம நிதி; ஆண்டில் 1829 பணிகள் ரூ.7.5 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 121 கிராம ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகிறது. இதில் மக்கள் பங்கேற்புடன் ஏழை,மிகவும் ஏழை, நலிவுற்றோர், மாற்றுத் திறனாளிகள் என 1,24,342 குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஊரக பகுதி சுய உதவி குழுக்களுக்கான கடன் வட்டி விகிதத்தில் 7 சதவீதத்திற்கு மேல் உள்ள வட்டிக்கு மானியமாக 5.5 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 7389 குழுக்களுக்கு ரூ.93,31,294 வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இலக்கு மக்களின் குடும்பங்களிலிருந்து 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர;களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் 492 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 327 இளைஞர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் இரண்டு நுண்ணுயிர் உரமாக்கும் மையம் கட்டுதல் அனுகுச்சாலை அமைத்தல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.7.8 இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் 4 வாகனமும் நுண்ணுயிர் கலவை பிரிக்கும் பணியில் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் உரக்கலவை கிடங்கில் உள்ள பழைய குப்பைகளிலிருந்து நுண்ணுயிர் கலவை தயாரிக்கும் பணியும், நெகிழி மறு பயன்பாடு மையம் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் ஆலத்தூர; ஊராட்சி ஒன்றியத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்துவதற்காக பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 10 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 34.45 கி.மீ நீளத்திற்கு பணி நிறைவு பெற்றுள்ளது.

கிராமபுறத்தில் சுகாதார மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டுதல், அதனை பயன்படுத்த செய்தல், பொது கழிப்பறை பயன்பாடு மூலம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற கிராம ஊராட்சியினை ஏற்படுத்திட தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டுதல் செயல்படுத்தப்படுகிறது. 2020-2021-ஆம் ஆண்டு 368 தனி நபர் கழிப்பறைகள் ரூ.29.44 இலட்சம் கோடி மதிப்பீட்டிலும், 66 பொது கழிப்பறைகள் ரூ.38 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு பொது சேவை மையம் பயன்பாடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, தேசிய நில அளவை ஆவணங்கள் நவீன மையமாக்கல் திட்டம், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல், சமுதாய கழிப்பிடம் கட்டுதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், தேசிய மதிய உணவு திட்டம், புரட்சி தலைவர் எம்.ஜீ.ஆர். சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த நீர் வடிபகுதி மேலாண்மை திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு முகாம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணிகள் பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்ட்டது. நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர சம்மந்தப்பட்;ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ ராஜேந்திரன் உட்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!