Perambalur district DMK executive committee meeting decided to celebrate Minister Udayanidhi Stalin’s birthday!
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், எம்எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா, குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.ஆனந்தகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவம்பர் -27 அன்று மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது,
வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் குறித்து நடைபெறும் முகாமில் BLA-2, முகவர்கள் கலந்து கொண்டு புதிய வாக்காளர்கள் நிறைய பேரை சேர்க்க வேண்டும் எனவும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி பணியாளர்கள் BLC சிறப்புக்கூட்டம் நடத்தி தயார் படுத்தவும்,
வருகிற டிசம்பர் -17 அன்று சேலம் மாவட்டத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து கிளைகளிலும் இருந்து திரளாக கலந்து கொள்வது,
மகளிர் அணிக்கு அதிகளவில் உறுப்பினர்கள் சேர்த்து தலைமையிடம் வழங்கவும், ஆலத்தூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் சோமு.மதியழகன் மறைவிற்கும், பெரம்பலூர் ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் சங்கு சுந்தர்ராஜ் மனைவி மறைவிற்கும், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன் தாயார் பொன்னி மாரியாயி மறைவிற்கும், பெரம்பலூர் நகர 19- வது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன் தந்தை மறைவிற்கும், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், மாவட்ட பிரதிநிதி முருகேசன் தாயார் நல்லம்மாள் மறைவிற்கும், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தங்கமணி தாயார் கல்யாணி மறைவிற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், தென்னவன் அறிவேந்தி தாயாரும், கூடலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மறைவிற்கும், ஆலத்தூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பேரையூர் ராஜி மனைவி வேம்பு மறைவிற்கும்,
அருமடல் முன்னாள் கிளைச் செயலாளர் பழனிமுத்து மறைவிற்கும், நாவலூர் கிளைச் செயலாளர் சுப்பிரமணி மறைவிற்கும்,பெரம்பலூர் மாவட்ட பிரதிநிதி பிரபு தாயார் லெட்சுமி மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார்,வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.