Perambalur District DMK Executive Committee Meeting, Ministers Attend; District Secretary Kunnam. C. Rajendiran announcement!
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையாவது:
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் 14.11.2023, செவ்வாய்க்கிழமை , மாலை 3.00.மணி அளவில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள, மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா, குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
விளம்பரம்:
இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். அது சமயம் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டத்தில், சேலம் இளைஞர் அணி மாநாடு, கூட்டுறவு சங்க தேர்தல், பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது குறித்து, கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: