Perambalur district DMK leader joined AIADMK in the presence of General Secretary Edappadi K. Palanisamy!
பெரம்பலூர் மாவட்டம் வயலப்பாடியை சேர்ந்தவர் வெங்கடாசலம். திமுக முக்கிய பிரமுகராக இருந்த இவர் அக்கட்சியில் குன்னம் எம்.எல்.ஏ தொகுதிக்கு வேட்பாளராகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் நிலைக்கு வளர்ந்தவர், திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பின் நாளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் இவரது திறமை வளர்ச்சி காரணமாக கடந்த சுமார் 8 ஆண்டுகளாக அக்கட்சியில் அடக்குமுறைக்கு ஆளான இவர், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவுடன், இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி. கே. பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார்.
குன்னம், தொகுதியிலும், பெரம்பலூர் மாவட்ட அளவிலும் அதிமுகவில் சிறப்பான பங்களிப்பார் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.