Perambalur District DMK Polling Booth Agents’ Consultation Meeting!
பெரம்பலூர் மாவட்ட பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது குறித்து, மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் எம். எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா கலந்து கொண்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்தபடி, பாக முகவர்கள் கூட்டம் நடத்துவது, கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்துஆலோசனைகள் வழங்கினார்.
இதில் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, பேரூர் செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்