Perambalur District DMK Working Committee Meeting Ex-Minister A. Raja, Transport Minister Sivashankar will attend! District in-charge V. Jagadeesan Report!
பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 30.05.2024, வியாழக்கிழமை, காலை 9.00.மணியளவில் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள, மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்னியூர் சிவா, குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.ஆனந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. – போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். அது சமயம் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறும், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் ஜுன்.3 பிறந்தநாள் விழா,
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.