Perambalur District Executive Committee Meeting; DMK Deputy General Secretary A. Raja, MP attended
பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி. கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஷ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ப.செந்தில்நாதன்,யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பபிள்ளை, க.ராமலிங்கம், துணை தலைவர் எம்.ரெங்கராஜ், பேரூர் செயலாளர்கள் அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலட்சுமி சேகர்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி,
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.தங்கராசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட மகளிர் அணி விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த செயற்குழு கூட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் ஜூன் 3 அன்று பிறந்தநாள் விழா ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது எனவும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது என்றும்,
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள உள்ள வாக்குச் சாகுபடி முகவர்கள் விழிப்புடன் பங்கேற்று கழக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும்,
நன்றி
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக வீ. ஜெகதீசனை நியமனம் செய்த, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா., எம்.பி.க்கும், போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கருக்கும் செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்றும்,
இரங்கல் தீர்மானம்!
பெரம்பலூர் நகரம் 17-வது வார்டு, நகராட்சி உறுப்பினர் துரை. காமராஜ் மறைவிற்கும், பெரம்பலூர் நகரம் 4-வது வார்டு திமுக செயலாளர் விஜயகுமாரின் தந்தை சங்கர் மறைவிற்கும், வேப்பந்தட்டை கிளை செயலாளர் செல்வராஜ் மனைவி மூக்காயி மறைவிற்கும், வேப்பந்தட்டை கிளை முன்னாள் செயலாளர் தங்கவேல் மறைவிற்கும், வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி கிளைக் செயலாளர் சாமிதுரை மனைவி அய்யம்மாள் மறைவிற்கும், அரும்பாவூர் மேட்டூர் மூத்த முன்னோடி லிங்கம ரெட்டியார் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தும், கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.