Perambalur district final voter list will be released on Jan 22!
பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகூட்டம் பெரம்பலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாசலம், தலைலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்று முடிவடைந்துள்ளது. முகாம்களின்போது பெறப்பட்ட மனுக்களை முறையாக பரசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2024 அன்று வெளியிடப்டவுள்ளது.
இந்த நிலையில் நடைப்பெற்று வரும் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள ”வாக்காளர் பட்டியல் பார்வையாளர்” (Electoral Roll Observer) வெங்கடாசலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்றாவது ஆய்வினை மேற்கொண்டு ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேர்தல் துறை அலுவலர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.