Perambalur district lawyers boycotted court work for the 4th day and went on a fast!
பெரம்பலூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கருணாகரனை வக்கீல் தொழிலை சுதந்திரமாக செய்வதற்கு அச்சுறுத்தும் வகையில் அவரது வீட்டிற்கே சென்று அசிங்கமாக திட்டி அவரை கொலை மிரட்டல் விடுத்த எதிரிகளின் செயலை கண்டித்தும், எதிரிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் 20ம்தேதி முதல் கோர்ட் பணிகளிலிருந்து வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என வக்கீல்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி இன்றும் 4வது நாளாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பெரம்பலூர் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே பார் அசோசியசன் தலைவர் வள்ளுவன்நம்பி மற்றும் அட்வகேட் அசோசியசன் தலைவர் மணிவண்ணன் தலைமையில் வழக்கறிஞர்கள் இன்று கொட்டிய மழையிலும் நனைந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.