Perambalur: District Level Summer Training Camp : Collector Call!
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 2024 ஆம் ஆண்டிற்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 29.04.2024 முதல் 13.05.2024 வரை, டேக்வாண்டோ, கைப்பந்து, தடகளம், இறகுபந்து மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர் மற்றும் மாணவரல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருவாய் மெசின் மூலம் மட்டுமே சந்தா தொகை ரூ.200/- செலுத்த வேண்டும். சந்தாத் தொகையானது ரொக்கமாகப் பெறப்படமாட்டாது.
பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 26.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலரது தொலைபேசி எண்.7401703516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பெரம்பலூர் மாவட்டதிலுள்ள விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்/வீராங்கனைகள் அதிகஅளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.