Perambalur District Level Volleyball Tournament: Dhanalakshmi Srinivasan Arts College tops in girls category!
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2 நாட்கள் வாலிபால் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில், செப்டம்பர் 30 ல் துவங்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 36 ஆண்கள் அணியும், 4 பெண்கள் அணியும் என 40 அணிகளைச் சேர்ந்த 240 வாலிபால் விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தில் தலைவர் இரா.ப.பரமேஷ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் பிரிவில்வெற்றி பெற்ற, சு. ஆடுதுறையைச் சேர்ந்த எவரெஸ்ட் அணியினர் முதலிடத்தையும், தனலட்சுமி கல்லூரி அணியினர் இரண்டாம் இடமும், கொளக்காநத்தம் டிஜிஓ அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இதே போன்று பெண்கள் பிரிவில் தனலட்சுமி சீனிவாசன் கலைக் கல்லூரியைச் சேர்ந்த அணியினர் முதலிடமும், சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அணியினர் இரண்டாம் இடமும், ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அணியினர் மூன்றாம் இடத்தை பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், அஸ்வின் நிறுவனர் கே.ஆர்.வி கணேசன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட துணைச் செயலாளருமான தழுதாழை பாஸ்கர், மாவட்ட துணைச் செயலாளர் சன்.சம்பத், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் து. ஹரிபாஸ்கர், வாலிபால் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அதியமான் மற்றும் பெரம்பலூர் வாலிபால் அசோசியேசன் நிர்வாகிகள், வாலி பால் விளையாட்டு வீரர்கள் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.