Perambalur District Makkal Shakti Movement’s meeting demanding that the central government conduct the NEET examination!
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாதந்திர கூட்டம், மாநில துணைத் தலைவர் க.பெரியசாமி தலைமையில் நடந்தது. பெரம்பலூர் நகர பொறுப்பாளர் சி. காமராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சி. வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் து. இராஜேந்திரன்பி. திருஞான செல்வம், முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜி. சிவக்குமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ள நிலையில் பொறுப்பற்ற முறையில் பல்வேறு குழப்பங்களையும், முறைகேடு களையும், நடைபெற காரணமான தேசிய தேர்வு முகமையினை கலைத்து விட்டு மத்திய அரசின் கல்வித்துறை மூலமே நேரடியாக நீட் தேர்வை நடத்த வேண்டும். தேசிய தேர்வு முகமையின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் மலை மீது அமைந்துள்ள பூமாலை சஞ்சீவிராயர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக ரோப் கார் வசதியும், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு மலையை சுற்றி தார் சாலை அமைக்கவும்,
தமிழக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி யை கட்டாயமாக்கவும், அரசு நீச்சல் குளங்களில் குறைந்த கட்டணத்தில் பயிற்சியாளர்கள் மூலம் நீச்சல் பயிற்சி வழங்கவும், இதன் மூலம் மாணவ மாணவிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையை தடுக்கவும் எடுக்க வேண்டும், எனவும்,
ஆலத்தூரில தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கவும், தாலுகா தலைநகரான வேப்பந்தட்டையில் அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் காவல் நிலையம் அமைக்க வேண்டியும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் ஒன்றிய பொறுப்பாளர் த. வாஞ்சிநாதன், என். பெரியசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட இணைச் செயலாளர் மா. ரமேஷ் நன்றி கூறினார்.