Perambalur District Minorities, Bank Loan to Start a Business; Call to apply

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சிறுபான்மையினர் (முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர்கள், புத்தம், ஜெயின், பார்சி) வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திடும் விதமாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இக்கழகத்தின் கீழ் தனிநபா; தொழில் தொடங்க கடனுதவி ரூ50,000- முதல் அதிகபட்சம் ரூ.30 இலட்சம் வரையிலும், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுகடன் திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் முதல் ரூ.6 இலட்சம் வரையிலும், கல்வி கடன் திட்டத்தில் சிறுபான்மையினர் மாணவ – மாணவியர்கள் அரசால் அங்கீகரீக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழற்கல்வி, தொழிற்நுட்பக் கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9 இலட்சம் வரையிலும், கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனத்தின் மூலமாக இரண்டு கறவைமாடுகள் வாங்கிட ரூ.70 ஆயிரம் வரையிலும், ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது. மேற்படி கடன் திட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு நிபந்தனைக்குட்பட்டு குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டுவருகிறது.

மேற்படி டாம்கோ கடன் திட்டங்கள் குறித்து வரும் செப்18 அன்று பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், செப்.22 அன்று வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், செப்24 அன்று குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும், செப்.29. து. களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திலும் லோன் மேளா நடைபெறவுள்ளது.
மேற்படி லோன் மேளாவில் கலந்து கொண்டு டாம்கோ கடன் திட்டங்களில் கடனுதவிகளை பெற்று பயனடையலாம் என தெரிவிக்ப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!