பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பகுதி 1 மற்றும் பகுதி 2 ஒப்புகை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது 20.01.2016 முதல் ஒப்புகை வழங்கப்படும் திட்டம் நிறுத்தப்பட்டு மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை நிலை ஆணை எண்.2576 நாள். 18.09.2015 அறிவிக்கையின்படி மாற்றியமைத்து தற்பொழுது உத்யோக் ஆதார் குறிப்பு ( Udyog Aadhaar Memorandum ) என்ற பெயரில் ஒப்புகை வழங்கப்படவுள்ளது.
உத்யோக் ஆதார் குறிப்பு (Udyog Aadhaar Memorandum ) பெற கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. உத்யோக் ஆதார் குறிப்பு http://udyogaadhaar.gov.in. என்ற இணையதளம் மூலம் பெறலாம்.
இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பெறப்பட்ட பகுதி 1 மற்றும் பகுதி 2 அல்லது சிறுதொழில் பதிவு (SSI) 2006-ம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்டிருந்தால் இந்த உத்யோக் ஆதார் குறிப்பு பதிவு செய்ய தேவை இல்லை.
நிறுவனத்தார் விரும்பினால் பெற்றுக்கொள்ளலாம். உத்யோக் ஆதார் குறிப்பு எண், உரிமையளார் நிறுவனமாக இருந்தால் உரிமையாளர் பெயரிலும், பங்குதாரர் நிறுவனமாக இருந்தால் நிர்வாக பங்குதாரர் பெயரிலும் இருக்க வேண்டும். உத்யோக் ஆதார் குறிப்பு (UAM) திவு செய்ய எவ்வித ஆவணங்களும் அவசியமில்லை.
ஒரே ஆதார் எண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உத்யோக் ஆதார் ( UAM ) பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.