Perambalur district onion cultivation farmers extension of time to get insurance!

2023 ராபி சிறப்பு பருவத்தில் வெங்கா யம் சாகுபடி செய்யும் விவசாயிகள் இன்று டிச.4 மற்றும் நாளை (டிச.5 க்குள்) பயிர் காப்பீடு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரண்யா தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலுார் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2023 ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆலத்துார் மற்றும் பெரம்பலுார் பகுதியில் உள்ள கொளக்காநத்தம், செட்டிக்குளம், பெரம்பலுார் மற்றும் குரும்பலூர் பிர் காக்களில் அடங்கியுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பித்து, வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரத்து 85 பிரீமியமாக அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்யவேண்டும்.

காப்பீடு பதிவு செய்ய நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக் கணக்கு புத்த கம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர் மற்றும் முகவரி,நிலப்பரப்பு, சர்வே எண் மற் றும் உட்பிரிவு பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!