Perambalur District: Opportunity to add, delete, amend names in voter list tomorrow!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 27.10.2023 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளல் தொடர்பான மனுக்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறுவதற்கான 27.10.2023 முதல் 09.12.2023 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களில் வாக்கச்சாவடி முகவர்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க,திருத்தம் செய்ய வேண்டியவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து சம்மந்தபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழங்கப்படும் ஒவ்வொரு தகவலும் சரிபார்க்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது, இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது உள்ளிட்ட பணிகள் அரசியல் கட்சி பிரநிதிகளின் ஒத்துழைப்போடுதான் முழுமையாக மேற்கொள்ள முடியும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க,திருத்தம் செய்ய நாளை (09.12.2023) வரை வாய்ப்புள்ளதால், இந்த வாய்ப்பினை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம் செய்ய விரும்புவோர் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 அன்று வெளியிடப்படும், என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!