Perambalur: DRDA Project Director Lalitha explained to the complaint of the female panchayat President that she insulted the caste name! ?

Photo Credit & Thanks To textstudio. com

பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லலிதா மீது மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் அஞசலம் போலீசில் கொடுத்த புகாருக்கு திட்ட இயக்குநர் அ.லலிதா விளக்கமளித்து ஊடகத்தினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-2025-ன் கீழ் கதிர் அடிக்கும் களம் மற்றும் தானியக் கிடங்கு பணிகள், வேப்பந்தட்டை ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராம ஊராட்சியில் உள்ள பிசி தெருவில் ரஞ்சன்குடி செல்லும் சாலையின் வழியில் இடம் தேர்வு செய்து பணிகள் ஆரம்பிக்க வேலை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

இப்பணி தேர்வு செய்யப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டரில் மற்றொரு கதிர் அடிக்கும் களம் இருந்தது. இக்களம் 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. ஆனால், தற்போது இக்களம் மிகவும் சேதமடைந்துள்ளது. பொதுமக்கள் செல்ல பாதை இல்லாமல் இருந்ததால் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.

எனவே, ஊராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த இடத்தில்தான் கதிர் அடிக்கும் களம் அமைக்கவேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாளது வரை மேற்காணும் அட்டவணையில் உள்ள பணிகளை துவங்கிடக்கூடாது என இவரது கணவர் மற்றும் உறவினர்களுடன் இணைந்து இடையூறு செய்து வருகிறார். இச்செயலினால் இப்பணியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கதிர் அடிக்கும் களம் மற்றும் தானிய கிடங்கு பணிகளை உடனடியாக ஆரம்பித்தால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். எனவே. இடையூறு செய்து வரும் இவ்வூராட்சியின் தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-1 கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) பரிந்துரை செய்துள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலரின் கடிதத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரை விசாரிக்கும்பொருட்டு திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு மாலை 6.00 மணியளவில் நேரில் சந்தித்தேன். மேற்காணும் பணிகள் துவங்குவதற்கு ஊராட்சி மன்றத் தலைவரே தடையாக இருந்தால் அரசு திட்டங்களை செயல்படவிடாமல் தடுக்கும் காரணத்திற்காக நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என எச்சரித்து அனுப்பப்பட்டது.

இதுவே உண்மையாக நடந்த சம்பவம் ஆனால், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாதிரீதியாக அவரை திட்டியதாக போலியான புகார் அறிக்கை தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கும். ஊடகத்தினருக்கும் தவறான தகவலை பரவவிட்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கொடுக்கும் இதுபோன்ற தவறான செய்திகளை உண்மைத்தன்மையை உறுதிசெய்யாமல் வெளியிட வேண்டாம் என ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

ஆனால்,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா குறித்து விசாரித்த போது, மேலும், கிடைத்த கூடுதல் தகவல், அவர் தற்போது சிவன் கழுத்தில் உள்ள பாம்பை போன்றவர், தற்போது அவரது அலுவலகத்திற்கு அலுவல் தொடர்பாக பார்க்க வருபர்களை அரசு பணியாளர் என்ற மமதையில் தரம் தாழ்ந்து பேசுவார் என்றும், வயதிற்கோ, படிப்பிற்கோ மரியாதை கொடுக்காமல் பேசுவார் என்றும்,

ஆளும் கட்சியை பிரமுகர் ஒருவர் கூட கமிசன் பிரச்சனையில் யூனியன் அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார் என்றும், பல ஒப்பந்தாரர்கள் இவரிடம் அனுசரித்து போகததால் அவர்களை முடக்கி வைத்ததால், இன்று அவர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் பலர் தவிக்கின்றனர். சிலர் தப்பித்தால் போதும் பணியை முடித்துவிட்டு ஓடிவிட்டனர். ஆனால், அதிகாரி லலிதா சொந்த ஊரில் பங்களா ஒன்றை கட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு ஆளும் கட்சியை சேர்மன் ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர், இவரை வேறு ஊருக்கு மாற்றம் செய்ய எடுத்த நடடிவடிக்கையிலும் பின்னடைவு ஏற்பட்டது.

அதிகாரி லலிதாவிற்கு பலமுறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டும், அவரது சமூகத்தை ஒரு முக்கிய அரசியல்வாதி அவருக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருவதோடு, அந்த இடத்திற்கு அன்னியர் வேறு எவரும் வந்து விடக்கூடாது என தொடர்ந்து உதவி வருகிறார். அதனால்தான் வேறு ஊருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து பெரம்பலூரிலேயே நீடித்து வருகிறார். அந்த தைரியத்தில்தான் மேல்அதிகாரிகள் உள்பட யாரையும் மதிப்பதில்லை.

மேலும், கடந்த எம்.பி தேர்தலின் போது, மனமில்லாமல் தேர்தல் பணி செய்ததாகவும், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொண்டே கலெக்டருக்கே தேர்தல் ஆவணங்களை ஜெராக்ஸ் போட்டு கொடுக்காமல் மிசின் ரிப்பேர் என தெரிவித்தததால், கலெக்டரே, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு வந்து மெசின் ஆன் செய்ய கூறி ஜெராக்ஸ் போட்டு சென்றார் என்றால் பார்த்து கொள்ளுங்கள் என தெரிவித்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவருக்கும், அதிகாரி லலிதாவிற்கும் நடந்த மோதல் என்னவென்று இருவரையும் காவல் துறையினர் முழுமையாக விசாரித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும் என ஊரக வளர்ச்சி துறையை சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திட்ட அலுவலர் லலிதா தற்போது அரசியல்வாதிகள் ஆதரவு பலமாக இருப்பதால் பலரையும், கருடா சவுக்கியமா? என கேட்டவர், ஆளும் கூட்டணியில் 2 கம்யூனிட் கட்சியை சேர்ந்தவர்கள், விசிக உள்ளிட்ட கட்சியினர் பெண் ஊராட்சி தலைவருக்கு, ஆதரவு தெரிவித்து அவருடன் வந்து புகார் மனு கொடுத்ததால் சற்று நிலை குலைந்து போய் உள்ளார்.

இவரை வேறு ஊருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!