Perambalur district players stand out for the 2nd time in the National Paralympic Swimming Competition!

பெரம்பலூர் மாவட்ட வீரர்கள்-வீராங்கனை தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 2-வது முறையாக முதலிடம் மற்றும் 2-வது இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்-வீராங்கனைகளான மேலப்புலியூரைச்சேர்ந்த கலைச்செல்வன், புதுஅம்மாபாளையம் ரம்யா, மங்கலமேடு அம்பிகாபதி, ஆதனூரைச்சேர்ந்த ஜீவா, ஆகிய 4 பேரும் சமீபத்தில் தேனி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் ப்ரீ ஸ்டைல், பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் நான்கும் கலந்த 200மீ நீச்சல் போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இவர்களில் கலைச்செல்வன், ஜீவா, அம்பிகாபதி, ஆகிய 3 பேரும் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை இந்திய பாராலிம்பிக் கமிட்டி சார்பில் நடைபெற்ற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளில் கலைச்செல்வன் 200மீ தொடர் நீச்சல்போட்டியில் தேசிய அளவில் 2-வது இடம்பெற்றார். வீரர் ஜீவா 50மீ ப்ரீ ஸ்டைல் பிரிவில் தேசியஅளவில் முதலிடமும், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தேசியஅளவில் 2-வது இடமும் பெற்றார்.

அம்பிகர் நீச்சல்போட்டியில் 50மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தேசியஅளவில் முதல்இடமும் 100மீ நீச்சல்போட்டியில் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தேசியஅளவில் 2-வது இடமும்பெற்றார்.

இதற்காக 3 பேரும் சேலத்தில் இருந்து குவாலியருக்கு ரெயிலில் சென்று மீண்டும் பெரம்பலூர் திரும்பினர். தேசியஅளவில் சாதனை புரிந்த 3 பேரும், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பொம்மி, மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் மணிவண்ணனஆகியோர் கதர்ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர், மாவட்ட உள்ளடக்கிய கல்வி (ஐ.இ.) ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன்,சிறப்பு ஆசிரியை மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் குழுவினர் கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்தனர். 2-வது முறையாக தொடர்ந்து தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!