Perambalur District Rural Development Association waiting protest in collectorate
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுலவர் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதிகளின் கீழ் அறிவித்தபடி ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுலவர் சங்கம் சார்பில் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் வருகிற திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததின் பேரில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பந்தல் அமைத்து காத்திருப்பு போரட்டம் நடத்தி வருகின்றனர்.