Perambalur District School – College Students Poetry, Essay, Speech Competitions : Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 ,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 09.01.2024 (செவ்வாய் கிழமை)ஆம் நாளன்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 10.01.2024 (புதன் கிழமை)ஆம் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளன.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் இருவர் வீதம் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/-, மூன்றாம் பரிசு ரூ.5,000/- என பரிசுத் தொகை வழங்கப்படும் என பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.