Perambalur: District Secretary R.Tamilselvan welcomed AIADMK’s Venkatachalam and his supporters with shawls!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள வயலப்பாடியை சேர்ந்தவர் என். வெங்கடாசலம், நேற்று பெரம்பலூர் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் ரவிசந்திரனுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
இன்று தனது ஆதரவாளர்களுடன் பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர், வரவேற்ற அவர் அதிமுக துண்டை அணிவித்து வரவேற்றார். பின்னர், வெங்கடாசலத்துடன் திமுகவில் இருந்து வந்த தனது ஆதரவளர்களையும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்றிய செயலாளர்கள், பல்வேறு அணியை சேர்ந்தவர்கள் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், ஏ.கே.என் அசோகன் உள்ளிட்ட நூற்றுக் கணக்கணக்கான தொண்டர்கள், நிர்வரிகள் உடனிருந்தனர்.