Perambalur district urban local body election 69.11 percent turnout!
இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 69;11 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. பெண்களே அதிகளவில் வாக்களித்தனர். பெரம்பலூர் நகராட்சி, மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளிலும் மொத்த வாக்காளர் 84,073.
இதில் ஆண் வாக்காளர்கள் : 40614 பேரும், பெண் வாக்காளர்கள் : 43453 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், உள்ளனர். இவர்களில், ஆண்கள் 26552, பெண்கள் 31533 திருநங்கைகள் 0 என மொத்தம் 58105 பேர் வாக்களித்துள்ளனர். இது 69.11 சதவீதமாகும்.
பெரம்பலூர் நகராட்சியில், ஆண் வாக்காளர்கள் 21067, பெண் வாக்காளர்கள் 22634, திருநங்கைகள் 4 என மொத்தம் 43,705 வாக்களர்கள் உள்ளனர்.
இதில், ஆண்கள் 13592, பெண்கள் 15259, திருநங்கைகள் 0 என மொத்தம் 28851 பேர்கள் வாக்களித்துள்ளனர். இது 66.01 சதவீதமாகும்.
குரும்பலூர் பேரூராட்சியில், ஆண் வாக்காளர்கள் 5390. பெண் வாக்காளர்கள் 5747, திருநங்கைகள் 0 என மொத்தம் 11,137 வாக்காளர்கள் உள்ள நிலையில்,
ஆண்கள் 4052 பேரும், பெண்கள் 4707 பேரும், திருநங்கைகள் 0 என மொத்தம் 8759 பேர்கள் வாக்களித்துள்ளனர். 78.65 சதவீதமாகும்.
அரும்பாவூர் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 5286, பெண் வாக்காளர்கள் 5736 திருநங்கைகள் 1 என மொத்தம் 11,023 வாக்களர்கள் உள்ளனர்.
இதில், ஆண்கள் 3946, பெண்கள் 15259, திருநங்கைகள் 0 என மொத்தம் 8643 பேர்கள் வாக்களித்துள்ளனர். இது 78.41 சதவீதமாகும்.
பூலாம்பாடி பேரூராட்சியில், ஆண் வாக்காளர்கள் 3771. பெண் வாக்காளர்கள் 4002 திருநங்கைகள் 0 என மொத்தம் 7,773 வாக்காளர்கள் உள்ள நிலையில்,
ஆண்கள் 2781 பேரும், பெண்கள் 3307 பேரும், திருநங்கைகள் 0 என மொத்தம் 6088 பேர்கள் வாக்களித்துள்ளனர். 78.32 சதவீதமாகும்.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில், ஆண் வாக்காளர்கள் 5100, பெண் வாக்காளர்கள் 5334 திருநங்கைகள் 1 என மொத்தம் 10,435 வாக்காளர்கள் உள்ள நிலையில்,
ஆண்கள் 2181 பேரும், பெண்கள் 3307 பேரும், திருநங்கைகள் 0 என மொத்தம் 5764 பேர்கள் வாக்களித்துள்ளனர். இத 55.24 சதவீதமாகும்.