Perambalur District, Voter List Editing Camp Today and Tomorrow: Collector Info!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 01.11.2021 முதல் 30.11.2021 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும், உரிய ஆவணங்களுடன் நேரில் அணுகி பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்து வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பின் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முகாம் பற்றிய குறைபாடுகளுக்கு 9445252243 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது er22maptk@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ, அரசியல் கட்சியினர் மற்றும் வாக்காளர் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.