பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வருவாய் கோட்டாட்சியர் இரா. பேபி வெளியிட்டார்.
பின்னர், வருவாய் கோட்டாட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
01.09.2016 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,75,489 வாக்காளர்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,53,520 வாக்காளர்களும் என மொத்தம் 5,29,009 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்ப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியில் 01.01.2017ஆம் தேதியினை தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் 11.9.2016 மற்றும் 25.9.2016 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாம்கள் மூலமும் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களில் 5,475 ஆண் வாக்காளர்களும், 5,409 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 10,884 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 136 ஆண் வாக்காளர்களும், 128 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 264 வாக்காளர்களும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 56 ஆண் வாக்காளர்களும், 58 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 114 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளில் 1,37,297 ஆண் வாக்காளர்களும், 1,43,762 பெண் வாக்காளர்களும், 14 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,81,073 வாக்காளர்கள் உள்ளனர்.
குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் 1,28,473 ஆண் வாக்காளர்களும், 1,29,958 பெண் வாக்காளர்களும், 11 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 2,58,442 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,65,770 ஆண் வாக்காளர்களும், 2,73,720 பெண் வாக்காளர்களும், 25 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,39,515 வாக்காளர்கள் உள்ளார்கள் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன்(பெரம்பலூர்), தமிழரசன் (குன்னம்), சீனிவாசன்(ஆலத்தூர்), மனோண்மணி (வேப்பந்தட்டை) உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.